(இராஜதுரை  ஹஷான்)

பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது எமது நோக்கமல்ல   அனைத்து பங்காளி கட்சிகளுடன் கூட்டணியமைத்தே தேர்தலை வெற்றிக் கொள்வோம் என  சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான ஆதரவுடன் அரசாங்கம் தோற்றம் பெறாவிடின் முரண்பாடுகள் மாத்திரமே  மிகுதியாகும். ஆகவே இம்முறை  இத்தவறு திருத்திக் கொள்ளப்படுவது அவசியமாகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில்  பங்காளி கட்சிகளுடன்  கூட்டணியமைத்தே  போட்டியிடும். சின்னம் தொடர்பில்  எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.  ஆளும்  தரப்பினை பலவீனப்படுத்தும்   எதிர்கட்சியின் முயற்சிகள்   வெற்றிப் பெறாது .  தேர்தலை  வெற்றிக் கொள்வதற்கான  அனைத்து நடவடிக்கைகளும்   பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்  பசில் ராஜபக்ஷ  தலைமையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.