இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 163 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் ஐந்தாவதும், தொடரின் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்றைய தினம் மங்குனியில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ராகுல் 45 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 2 ஓட்டங்களையும், ரோசித் சர்மா 60 ஓட்டங்களையும், சிவம் டூப் 11 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஸ்ரேஸ் அய்யர் 33 ஓட்டங்களுடனும், மனிஷ் பாண்டே 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஸ்காட் குகெலேன் 2 விக்கெட்டுக்களையும், ஹமிஷ் பென்னட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

164 என்ற வெற்றியிலக்கை நோக்கி தற்போது நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.