2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

இந் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான உத்தயோகபூர்வ ஒலிம்பிக் சுடரை ஜப்பானிய நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த சுடரானது 2011 இல் புகுஷிமா பேரழிவிற்குப் பின்னர் மக்களுக்காக வீடு கட்டப்பட்ட தற்காலிக வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட 30 சதவீத மறுசுழற்சி அலுமினியத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது ஜப்பானின் புகழ்பெற்ற சின்னங்களின் ஒன்றான செர்ரி மலரை ஒத்ததாகவும், மழை மற்றும் 38 மைல் வேகத்தில் காற்று வீசினால் சுடரின் ஜோதியை அனையாமல் உள்ளபடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.