இந்தியாவில் இனங்காணப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளி!

02 Feb, 2020 | 12:15 PM
image

இந்தியாவில் இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளியொருவர், கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளார் என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நபர் கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்  சீனாவின் வுஹான் நகரில் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் 9 பேருக்கு கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்டதையடுத்து இவர்களை தனிமையில் வைத்து பரிசோதனை செய்து வந்துள்ள வைத்தியர்கள் இன்று இரண்டாவது நபரொருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக   உறுதி செய்துள்ளனர். 

மேலும், இவர்  ஜனவரி 24 ஆம் திகதி  சீனாவிலிருந்து கேரளா திரும்பியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெங்களூரில் மேலும் மூன்று பேருக்கு இந்த வைரஸ் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்ற நிலை எழுந்துள்ளது. 

இதனையடுத்து சீனாவுக்கு வெளியே 27 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சீனாவுக்கு வெளியே பிலிபெயின்ஸில் பதிவான இறப்புடன் இறப்புகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10