72 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டியுள்ள வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்துவதற்கும், வீதிகளை மூடுவதற்கும் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய சுதந்திர தின வைபவத்தை முன்னிட்ட ஒத்திகை, மற்றும் பணிகள் இன்றும் நாளையும் காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறும். 

இந்த நடவடிக்கைகளை முன்னிட்டு கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டர்ஸ் வீதி திசையில் பிரவேசித்தல், பொதுநூலக சந்தியில் கிளாஸ் ஹவுஸ் பகுதி ஊடாகவும், ஆனந்தகுமாரசாமி மாவத்தைக்குப் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தர்மபால மாவத்தையிலிருந்து எவ்.ஆர்.சேனாநாயக்க வீதிக்குள் பிரவேசிப்பதற்கும், விஜேராம மாவத்தையில் ரொஸ்மிட் பிளேஸ் மற்றும் பான்ஸ் பிளேஸ் ஊடாக கன்னங்கர மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் விஜேராம மாவத்தை, வித்யா மாவத்தை சந்தியின் ஊடாக வித்யா மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மெயிட்லன்ட் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கும், பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும், இலங்கை மன்றக் கல்லூரிக்கு அருகாமையில் சுதந்திர சதுக்க பகுதிக்குள் பிரவேசிப்பதற்கும் இந்தக் காலப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இனனும் சில வீதிகளில் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

- அரசாங்க தகவல் திணைக்களம்