ஆர்.பி

இத்­த­டவை நடைபெறவிருக்கும் சுதந்­திர தின விழாவில் சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­ப­தா­னது, தமிழ் மக்­களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ அவர்­களின் மொழி, கலா­சாரம், பூர்­வீகம் என்­ப­வற்றை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவோ இல்லை என்­ப­தையே எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.கடந்த ஐந்து வருடக் காலத்தில் சிங்­கள மொழியைத் தொடர்ந்து தமிழ் மொழி­யிலும் தேசி­ய­கீதம் இசைக்­கப்­பட்டு வந்­தது.  இந்­நி­லையில், சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதத்தை இசைப்­ப­தென்றும் எனினும் தேசிய கீதம் இசைக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் ஒவ்­வொ­ரு­வரும் அவ­ரவர் தாய் மொழியில் பாட முடியும் எனவும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­னது, ஏதோ தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலு­கையைப் போன்றே தெரி­கி­றது. இதன்­மூலம் உண்­மை­யான புரிந்­து­ணர்­வையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முடி­யாது என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இவ்­வாறு முன்னாள் நீதி­ய­ர­சரும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான சி.வி.விக்­னேஸ்­வரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு தெரி­வித்தார்.

இலங்­கையில் 72ஆவது தேசிய சுதந்­திர தின கொண்­டாட்­டத்தின் போது சிங்­கள மொழியில் மாத்­திரம் தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொது நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­தி­ருக்கும் கூற்று தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இது­வரை தேசிய கீதம் சிங்­களம்,  தமிழ் ஆகிய இரு மொழி­களிலும் இசைக்­கப்­பட்டு வந்­ததன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கும் உரிய அந்­தஸ்து வழங்­கப்­பட்­ட­தாக கரு­தப்­பட்­டது. எனினும் தற்­பொ­ழுது சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­படும் என கூறு­வதன் மூலம் சிங்­கள மேலா­திக்­கத்­தையே அது எடுத்துக் காட்­டு­வ­தாக உள்­ளது. 

மேலும் அவ­ரவர் தங்கள் தாய்­மொ­ழியில் அதனை பாட­மு­டியும் என்று கூறு­வது மொழிக்கு தரப்­பட்ட சலு­கை­யா­கவே எண்ணத் தோன்­று­கின்­றது. இதன் மூலம் குறித்த நபர் வாய்­மூடி மெள­ன­மா­கவும் கூட இருக்­கலாம். 

சுதந்­திரம் கிடைத்­தது முதல் தமிழ் மக்கள் காலா­கா­ல­மாக புறக்­க­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றனர்.  அதற்கு இத­னையும் சிறந்த உதா­ர­ண­மாகக் கொள்ள முடியும். இதே­வேளை, இந்­தி­யாவில் ஒரு மொழி­யி­லேயே தேசிய கீதம் பாடப்­ப­டு­வ­தாக சில உறுப்­பி­னர்கள் கூறு­கின்­றனர். இந்­தி­யாவை பொறுத்­த­மட்டில் வங்­காள மொழி­யி­லேயே தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­கின்­றது. வங்­காள மொழி அங்கு சிறு­பான்மை மொழி­யாகும். எனினும், பெரும்­பான்மை மக்கள் பேசும் இந்தி மொழியில் தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­வ­தில்லை.  அதே­போன்று இலங்­கை­யிலும் சிறு­பான்­மை­யா­னோரால் பேசப்­படும் தமிழில் மாத்­திரம் தேசிய கீதத்தை பாடினால்,  அதனை இந்­தியா போன்று பெருந்­தன்­மை­யுடன் இலங்கை வாழ் சிங்­கள மக்­களும் ஏற்­றுக்­கொண்டால், அது வர­வேற்­கத்­தக்­க­தாக இருக்கும் என்றும் அவர் தெரி­வித்தார்.

இலங்­கையின் தேசிய கீதம்,  நாடு சுதந்­திரம் பெற்ற சந்­தர்ப்­பத்தில் சிங்­க­ளத்­திலும் தமி­ழிலும் ஒன்­றன்பின் ஒன்­றாக இசைக்­கப்­பட்­டது. பின்னர் அது கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில்,  2015ஆம் ஆண்டு சிறு­பான்மை மக்­களின் ஆத­ர­வுடன் நல்­லாட்சி அர­சாங்கம் பொறுப்­பேற்ற சமயம் சுதந்­திர தின கொண்­டாட்­டத்­தின்­போது தேசிய கீதம் தமி­ழிலும் இசைக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் தற்­போது புதிய அர­சாங்கம் பெரும்­பான்மை மக்­களின் பேரா­த­ர­வுடன் பத­வி­யேற்ற கையோடு தேசிய கீதத்தின் தமிழ் வடி­வத்­துக்கு வழங்­கப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்வ அந்­தஸ்தை கைவிடும் விருப்­பத்தை அமைச்சர் ஜனக பண்­டார தென்­னகோன் வெளி­யிட்­டி­ருந்தார். இந்­நி­லையில்,  தமிழ் மக்கள் தமது கடு­மை­யான ஆட்­சே­ப­னையை வெளி­யிட்­டி­ருந்­தனர். 

தமிழில் தேசிய கீதத்தை பாடு­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு இசை­வா­னது என்றும் சிங்­க­ளமும் தமிழும் உத்­தி­யோ­க­பூர்வ மற்றும் தேசிய மொழிகள் எனவும் அர­சி­ய­ல­மைப்பின் 18 மற்றும் 19ஆவது சரத்­துகள் இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன என்றும் தமிழ் மக்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

இதே­வேளை,  பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ இச்­சர்ச்சை தொடர்பில் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கருத்து வெளி­யி­டு­கையில்,  சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யி­ன­ராகக் கொண்ட பகு­தி­களில் இடம்­பெறும் தேசிய வைப­வங்­களில் தேசிய கீதத்தை சிங்­கள மொழியில் மாத்­திரம் பயன்­ப­டுத்­தலாம் எனவும் தமி­ழர்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட பகு­தி­களி்ல் சுதந்­தி­ரத்­துக்கு பின்னர் நடை­மு­றையில் இருந்­த­வாறு தமிழ் பிர­தே­சங்­களில் தமிழில் இசைக்­கலாம் எனவும் கூறி­யி­ருந்தார். 

மேலும், எதிர்­வரும் சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­க­ளின்­போது தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­ப­டுமா என அவ­ரிடம் கேட்­கப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பிர­தமர் அது தொடர்பில் பதி­ல­ளிக்­கையில், அர­சாங்கம் இவ்­வி­டயம் தொடர்­பாக எது­வித முடி­வையும் எடுக்­க­வில்லை என தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லை­யி­லேயே சுதந்­திர தினத்­தின்­போது சிங்­கள மொழியில் மாத்­திரம் தேசிய கீதம் இசைக்­கப்­படும் என இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க கூறி­யி­ருக்­கின்றார். 

இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகி­ய­னவும் இச்­செ­யலை கண்­டித்­துள்­ளன.

சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடாகும். நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டுமாயின் தமிழ், முஸ்லிம் மக்களின் தனித்துவங்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும் மேலும், தேசிய கீதம்  சிங்களத்தில் மட்டும் பாடப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பானது நல்லிணக்கத்தை மட்டுமன்றி அரசியலமைப்பையும் மீறும் செயல் என இலங்கை தமிழரசுக் கட்சியும் கண்டித்துள்ளன.