(வத்துகாமம் நிருபர்)

தரையில் இருந்து பலாக்காய் பறிக்கும் போது கால் இடறி  கீழே விழுந்த நபர், பலத்த காயங்களுடன் கேகாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளார்.

தேவாலகம  தம்புக்கம என்ற இடத்தைச் சேர்ந்த தயாரத்ன மொல்லிகொடை என்பவர் (வயது 66) தனது வீட்டுத் தோட்டத்தில் பலாய்க்காய் பறிப்பதற்காக மனைவியுடன் சென்றுள்ளார். 

தடியில் மாட்டப்பட்ட கொலுக்கியின் உதவியுடன் பலாக்காயை கீழ் நோக்கி இழுக்கும் போது பலாக்காயுடன் சேர்ந்து அவரும் பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். 

அவ்விடத்திருந்த கொங்கிறீட் பாதையின் மீது தலை மோதியதால் பலத்த காயத்திற்குள்ளான அவரை கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலீஸார் மேற்கொண்டுள்ளனர்.