Acute respiratory distance distress syndrome என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை.

Published By: Daya

01 Feb, 2020 | 02:11 PM
image

எம்மில் சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும். 

அதற்கு Acute respiratory distance distress syndrome என்று குறிப்பிடுவார்கள். நுரையீரலில் சில பாதிப்புகள் ஏற்பட்டு, நுரையீரலில் உள்ள காற்றறைகளில் எதிர்பார்ப்புக்கு மாறாக திரவம் உருவாகும் நிலைதான் அக்யூட் செஸ்பிரேடரி டிஸ்டிரஸ் சின்ட்றோம் என்கிறார்கள். இதற்கும் தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

நுரையீரலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து, ஒருவகையான திரவம் கசிந்து, நுரையீரலிலுள்ள சிறிய காற்றறைகளில் உறைந்து விடுகிறது. இதனால் சுவாசத்தின் மூலமாக நுரையீரலுக்குள் வரும் காற்றை போதுமான அளவிற்கு சுவாசிக்க முடிவதில்லை. இதன் காரணமாக உங்களது உடல் உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ஒக்சிஜன் அளவில் தடை ஏற்படுகிறது. 

நிமோனியா காய்ச்சல், வீக்கமடைந்த கணையம், தீக்காயம், நீண்ட நாட்களாக எடுத்து வரும் மருத்துவம், சுவாச கோளாறு என பல்வேறு வகையான பாதிப்புகளின் மூலம் இந்த நிலை உருவாகிறது. இத்தகைய பாதிப்பு ஏற்படும்போது பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும். சில தருணங்களில் வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் உண்டாகும். 

இதற்காக நுரையீரலுக்கு அதிகமாக சிகிச்சை மேற்கொள்ளாமல், இத்தகைய பாதிப்பை உண்டாக்கிய நோய்க்கு சிகிச்சை அளித்தால் இவை குணமாகும். உதாரணமாக ஒருவர் தீக்காயத்திற்குள்ளாகி இருந்தால், அதன் காரணமாக இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கும். இவருக்கு தீக்காயத்திற்கான வைத்திய சிகிச்சையை அளித்தால் இந்நோய் நாளடைவில் குணமடையும்.

மூச்சு சுவாசிப்பதில் பிரச்சினை, குறைந்த இரத்த அழுத்தம், எதிர்பாராத சுவாசதிணறல், இதய துடிப்பு வழக்கத்தைவிட மாறான அளவில் இயங்குவது, இருமல், காய்ச்சல், நெஞ்சு வலி, நகங்களும் உதடுகளும் இயல்பான நிறத்தை இழந்திருத்தல், சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களது நுரையீரலின் செயற்திறனை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதன்மூலம் உங்களுக்கு Acute respiratory distance distress syndrome பாதிப்பு இருக்கிறதா? இல்லையா ?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

இதன்போது சிலருக்கு ஒட்சிசன் தெரபியை பிரத்தியேக கருவியின் மூலம் வழங்கி நிவாரணமளிப்பார்கள். இந்த பாதிப்பை அலட்சியப்படுத்தினால் உங்களது இதயம், சிறுநீரகம் ,நுரையீரல் போன்றவை செயலிழப்பிற்குள்ளாகி உயிரிழக்கின்றனர். 

 சிலருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி, அதன் காரணமாக இதய பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு இரத்தம் உறைவதில் பிரச்சினை ஏற்படலாம். எனவே மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியதும், உடனடியாக வைத்தியரிடம் சென்று, ஆலோசனை செய்து, உரிய பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பை உறுதி செய்து கொண்டு, சிகிச்சை பெற்று, குணமடைய வேண்டும். இதற்காக தற்போது நவீன சிகிச்சைகளும் அறிமுகமாகியிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15