கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பள்ளிவாசல்லதுறையில் வீடொன்றில் இருந்த வயோதிப பொண்ணொருவர் ௯ரிய ஆயுதம் ஒன்றினால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவு இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி சம்மட்டிவாடி, பள்ளிவாசல்துறை பகுதியைச் சேர்ந்த தேவான அம்மா (வயது 83) வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சம்சுல் ராபி சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி குறித்த வயோதிப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்த கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொலை செய்தமைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ௯றினார்.

கற்பிட்டி பொலிஸார் இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.