யாழ்ப்பாணம் - இரத்மலானை இடையிலான விமான சேவை  FiTs AiR விமான சேவை நிறுவனத்தினால் இன்று காலை தொடங்கப்பட்டது.

இரத்மலானையில் இன்று காலை புறப்பட்ட விமானம் 9 மணியளவில் பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை சென்றடைந்தது.

FITS AIR விமான சேவையின் ATR72 விமானம் 45 பயணிகளுடன் 9.00 மணிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்து 31 பயணிகளுடன் 10.50 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இன்று முதல் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் FITS AIR விமானசேவை இடம்பெறும்.

இரத்மலானையில் இருந்து காலை 7.30 மணிக்கும் பலாலியில் இருந்து 9.30 மணிக்கும் விமான சேவை இடம்பெறும்.

ஒரு வழி கட்டணமாக ரூபா 7500/- அறவிடப்படுகிறது என்று FiTs AiR விமான சேவையின் முகாமையாளர் குலசிங்கம் வசீகரன் தெரிவித்தார்.