வவுனியாவில் பொலிஸ் சோதனை சாவடி ஒன்றில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 8கிலோ கேளர கஞ்சாவினைக் கடத்த முற்பட்ட பொலிஸாரையும் பயணம் மேற்கொண்ட மோட்டார் வாகனத்தையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கனகராயன்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 8கிலோ 600கிராம் கேரளா கஞ்சாவினை மோட்டார் வாகனத்தில் மறைத்து வைத்துக்கொண்டு யாழிலிருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற 31வயதுடைய பொலிஸ் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பயணித்த மோட்டார் வாகனத்தையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் , குறித்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.