கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் விபரம்

Published By: Digital Desk 3

01 Feb, 2020 | 12:10 PM
image

சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வுஹான் நகரிலுள்ள விலங்குகள் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியதிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதோடு கிட்டத்தட்ட 12,000 பேர் பாதிப்படைந்துள்ளார்கள்.

இதேவேளை, சீன நாட்டிற்கு வெளியே, 100 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்து நேற்று உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்துள்ளது. 

கொரோனா வைரஸின் (2019-nCoV) தாக்கம் உறுதிப்படுத்திய இடங்கள் இதோ,

1. சீனா : பாதிப்பு - 11,791 பேர், உயிரிழப்பு - 259 பேர்

2. தாய்லாந்து : பாதிப்பு - 19 பேர்

3. ஜப்பான் : பாதிப்பு - 17 பேர்

4. சிங்கப்பூர் : பாதிப்பு - 16 பேர்

5. ஹொங்கொங் : பாதிப்பு - 12 பேர்

6. தாய்வான் : பாதிப்பு - 10 பேர்

7. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 09 பேர்

8. மலேசியா : பாதிப்பு - 08 பேர்

9. மக்காவு : பாதிப்பு - 07 பேர்

10. அமெரிக்கா : பாதிப்பு - 07 பேர்

11. தென்கொரியா : பாதிப்பு - 11 பேர்

12. பிரான்ஸ் : பாதிப்பு - 06 பேர்

13. ஜேர்மன் : பாதிப்பு - 07 பேர்

14. வியட்நாம் : பாதிப்பு - 05 பேர்

15. டுபாய் : பாதிப்பு - 04 பேர்

16. கனடா : பாதிப்பு - 04 பேர் பாதிப்பு

17. ஐக்கிய இராச்சியம் - 4

17. ஐக்கிய அரபு இராச்சியம் - 4

19. இத்தாலி : பாதிப்பு - 02 பேர் பாதிப்பு

20.ரஸ்யா - பாதிப்பு - 02 பேர் பாதிப்பு

21. நேபாள் : பாதிப்பு - ஒருவர் 

22 கம்போடியா : பாதிப்பு - ஒருவர் 

23. பின்லாந்து : பாதிப்பு - ஒருவர்

24. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - ஒருவர்

25. இந்தியா : பாதிப்பு - ஒருவர்

26. இலங்கை : பாதிப்பு - ஒருவர்

27. ஸ்பெயின் : பாதிப்பு - ஒருவர்

இந்நிலையில், உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம், சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகள்:

* இருமல், சளியை சிந்திய பிறகு சோப் அல்லது கிருமி நாசினியை கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும்.

* சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய், மூக்கை மூட வேண்டும். அந்த துணியை மூடிய குப்பை தொட்டியில் போட வேண்டும். 

* காய்ச்சல், இருமல் உடையவர்களிடம் நெருக்கமாக பழகுவதை தவிர்க்க வேண்டும்.

* பொது இடங்களில் கண்டிப்பாக எச்சில் துப்ப கூடாது.

* காய்ச்சலுடன் இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

* கால்நடை சந்தைக்கு சென்றால், அங்குள்ள விலங்குகளை நேரடியாக தொடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* வேக வைக்காத அல்லது முழுமையாக வேகாத இறைச்சியை சாப்பிட கூடாது.

* பால், இறைச்சி போன்ற உணவு பொருளை கையாளும்  போது உணவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* உணவு தயாரிக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும், கைகள் அழுக்காக காணப்பட்டாலும் உடனே கைகளை கழுவ வேண்டும்.

* கழிவறை சென்று வந்ததும் சோப் அல்லது கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.

இத்தகைய வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றினால் உலகை ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸை தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47