சீனாவின் வுஹான் நகரில் உள்ள 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக சென்றிருந்த UL 1423  விசேட விமானம் மத்தளை விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது.

அதேவேளை குறித்த விமானத்தில் வருகைதந்த மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச சிகிச்சை முறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.