சீன மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் : ரத்தன தேரர்

By R. Kalaichelvan

31 Jan, 2020 | 07:29 PM
image

(ஆர்.விதுஷா)

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக  அதிகளவிலானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் கவலை  வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே  ரத்தனதேரர் அந் நாட்டு மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் எனவும் வைரஸ்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் விரைவில் நலமடைய  பிராத்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை ,மிருக கொலையை நிறுத்துவதற்கான சட்டமொன்றை  கொண்டுவருமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம்  கோரிக்கையொன்றையும்  முன்வைத்துள்ளார். 

இராஜகிரியவில் உள்ள சதஹம் செவனவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை  தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது,   

கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய  ரீதியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் , இதன் தாக்கம் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலாக அனைத்து வித நடவடிக்கைகளையும் , சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில்  அநாவசியமாக பயப்பட வேண்டிய  தேவை  இல்லை. ஆகவே ,கொடுக்கப்படும் உண்மை தகவல்களுக்கு அமைய செயற்படுவதன் ஊடாக  இந்த நோய் நிலைமையை உரிய  வகையில் எதிர்கொள்ளகூடியதாகவிருக்கும்.  

அத்துடன்,  இந்த வைரசின்  தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீன மக்களையிட்டு கவலையடைகின்றோம்.

கொரோனா  வைரசின் தாக்கம் தொடர்பில் சுகாதார  அமைச்சு  மக்களை தெளிவு படுத்த வேண்டியது அவசியமானதாகும். கொரோனா வைரஸ்  வெறுமனே நோய் தாக்கத்திற்கு உள்ளானவருடைய வியர்வை எச்சில் பட்டால் பரவும் என்று  நினைப்பது தவறான விடயமாகும்.

இந்த வைரஸ் எமது வாய் மற்றும் மூக்கின் ஊடாக  உடலினுள் பிரவேசிக்கும் போது மாத்திரமே இந்த நோயின் தாக்கம் ஏற்படுகின்றது.

ஆகவே தான் முக மூடிகளை பாவிப்பது சிறந்தது என  கூறப்படுகின்றது. 

அதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி எம்மிடத்தில் காணப்படும் பட்சத்தில் இந்த வைரசின் தாக்கம் ஏற்படாது.  

இந்த வைரசின் தாக்கம் ஏற்படும் அனைவருமே உயிரிழப்பதில்லை. சிறுவர்கள் இந்தவைரஸ் தாக்கத்திற்கு  உள்ளாகும் நிலைமை மிக   குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

இது வரையில் சீனாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில்  உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறெனின் நோயெதிர்ப்பு சக்கதி குறைந்த  மட்டத்தில் இருப்போரையே வைரஸ் அதிக  அளவில் தாக்குகின்றது என அவர் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் -...

2023-02-08 14:36:56
news-image

எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது...

2023-02-08 16:05:15
news-image

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு...

2023-02-08 14:34:26
news-image

மலையகப் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ரணில் சொல்வதை...

2023-02-08 16:52:58
news-image

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி...

2023-02-08 16:26:15
news-image

வரி திருத்த சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற...

2023-02-08 15:54:09
news-image

இனப்பிரச்சனைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின்...

2023-02-08 15:18:23
news-image

எதிர்காலத்தில் இ.தொ.கா. மக்களுக்கு தேவையான விடயங்களை...

2023-02-08 17:02:02
news-image

அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து...

2023-02-08 16:48:01
news-image

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக தொழில்...

2023-02-08 16:38:26
news-image

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல...

2023-02-08 16:36:18
news-image

இலங்கையில் சிறுவர்களுக்கான ஆதரவுச் சேவைகளைப் பலப்படுத்த...

2023-02-08 16:34:52