50 சதவீதமான இளைஞர்களிடையே பாலியல் சுகாதாரம் பற்றிய அறிவு  மட்டுப்பட்டுள்ளது - ஐ .நா சனத்தொகை நிதியம் 

Published By: R. Kalaichelvan

31 Jan, 2020 | 05:22 PM
image

இலங்கையில் 50 சதவீதமான இளைஞர்களிடையே பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் பற்றிய அறிவு மட்டுப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் , பாலியல், இனவிருத்தி சுகாதார திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கம் அளித்த 1.4 மில்லியன் டொலர் திட்டத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல், இனவிருத்தி சுகாதாரம் குறித்த சேவைகளுக்கான வழிமுறைகளை மேம்படுத்தும் பணியில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (இலங்கை) ஈடுபட்டுள்ளது.

இதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதிற்கிணங்க 2020ஆம் ஆண்டிற்கான வருடாந்த வேலைத் திட்டங்களில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இன்று வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டில் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத்திணைக்களம், மக்கள் தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்பை மேற்கொண்டது. அவ் கணக்கெடுப்பின்பிரகாரம், 15 - 49 வயதுடைய பெண்களில் 17 வீதமானோர் வாழ்க்கைத் துணையால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுத்தப்படுகிறார்கள்.  

50 சதவீதமான இளைஞர்களிடையே பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் பற்றிய அறிவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும், திருமணமான பெண்களில் 35 வீதமானோர் எந்த கருத்தடை முறைகளையும் பயன் படுத்தவில்லை என ஒரு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவிக்கையில், 

பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார உரிமைகள் குறித்த போதிய அறிவின்மை மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறை என்பன ஒன்றிற்கொன்று தொடர்புடையதாக இருப்பதால் நாட்டின் அமைதி, வளர்ச்சியில் பெண்களினதும் இளைஞர்களினதும் பங்களிப்பு குறைவாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் அதன் பங்காளர்களான பெண்கள் அபிவிருத்தி மையம், யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையம் மற்றும் இலங்கை குடும்பத் திட்ட சங்கம் ஆகியன இணைந்தே இன்று வருடாந்த வேலைத் திட்டமிடலில் கையெழுத்திட்டன.

பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறை, இன விருத்தி சுகாதாரம் பற்றிய தகவல்களை அணுகுவதற்கான வசதியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் தொடர்பாக குறித்த வேலைத் திட்டத்தில் காணப்படுகின்றது.

இலங்கையின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை பேணுவதில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களில் ஜப்பான் அரசாங்கம் இலங்கையுடன் இணைந்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் அளித்த 1.4 மில்லியன் டொலர் திட்டத்தில் இந்த கூட்டு ஒப்பந்தமும் அமைந்துள்ளது. 

இவ் திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன் அதன் பங்காளர்கள், சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து செயற்பாவுள்ளதாக இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29