மத்திய ஜப்பானில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நோடா பிரதேசத்திலிருந்து 6 கிலோ மீற்றர் வட கிழக்கு பகுதியில் குறித்த பூமியதிர்ச்சியானது ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பூமியதிர்ச்சியானது 4.9 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. 

குறித்த அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.