இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தின் தலைமை வைத்தியர் அதிகாரியான பேராசிரியர் கிறஸ் விட்டி இதனை உறுதி செய்துள்ளார்.

ஒரோ குடும்பத்தை சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் அளித்து வருவதாகவும், மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்து அரசு போதிய அளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சீனாவில் வைரஸினால் பாதிக்ப்பட்டு 213 பேர் உயிரிழந்துள்ளதாக சீன செய்திகள் தெரவித்துள்ளதோடு , 9821 பேர் குறித்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.