தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, பாதுகாப்புப் பணியாளர்களுக்கான குறைந்தப்பட்ச ஊதியத்தை முறைப்படுத்துதல், புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க  பாதுகாப்பு அமைச்சு எதிரபார்த்துள்ளது.   

தரமான பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காக நாடு பூராகவும் தனியார் பாதுகாப்பு சேவைகளை நெறிப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இந்த ஒழுங்குபடுத்தல் செயன்முறையை விரைவு படுத்துவதன் மூலம், பாதுகாப்பு சேவை வழங்குனர்களின் பதிவு மற்றும் அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல் தொடர்பான செயற்பாடுகளை சீராக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.