அக்கரைப்பற்று -  கண்ணகிபுரம் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 8 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த  ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்த போது ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.