உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த  26 வயதான நெரின் புளோரின் என்பவரே இவ்வாறு 9 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது அவர் இந்த தாக்குதலுக்குள்ளானார். 

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதுடன் அவர்களில் பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.