கிராமிய பெண்கள் தொழில்முனைவோராகுவதற்கு உதவும் அமெரிக்கத் தூதரகம்

Published By: Digital Desk 3

31 Jan, 2020 | 02:42 PM
image

அமெரிக்கத் தூதரகத்தின் கிராமிய பெண்கள் தொழில்முனைவு திட்டத்தைச் சேர்ந்த இருபது பட்டதாரிகள் தமது தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக நேற்று  வியாழக்கிழமை கண்டியிலுள்ள அமெரிக்க தகவல் கூட்டத்தில் (American Corner Kandy) வர்த்தக கண்காட்சியை நடடைப்பெற்றது.

 “பணம்  இன்றி எவ்வாறு வியாபாரமொன்றை ஆரம்பிப்பது” எனும் பெயரிலான ஆறு மாதகால கற்கைநெறியில் இந்த பெண்கள் பங்கெடுத்திருந்தனர்.

சிறிய வணிகமொன்றை ஆரம்பித்து அதனை முன்நடத்திச் செல்வதற்குத் தேவையான திறன்கள் பற்றி இத்திட்டம் அவர்களுக்கு கற்பித்தது. 2016ஆம் ஆண்டு முதல் கண்டி அமெரிக்க தகவல் கூடம் இத்திட்டத்தை நடத்தி வருகிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷோபனா ராஜேந்திரன் தலைமையிலான இத்திட்டத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமான பெண்கள் பங்குபற்றியுள்ளனர். தமது குடும்பங்களுக்கு உதவுவதற்கும் தன்னிறைவு காண்பதற்கும்தேவையான திறன்களை பெண்களுக்கு வழங்கும் நோக்கில் கலாநிதி ராஜேந்திரன் இத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் அவர்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு இந்த திட்டம் உதவுகிறது. வணிகத் திறன்களுக்கு மேலதிகமாக, பங்கேற்பாளர்கள் அவர்களது சந்தைப்படுத்தல் திறன்களை மேம்படுத்துவதற்குத்தேவையான அடிப்படை ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்கின்றனர். தங்களது குடும்பம் மற்றும் சமூகத்தை பலப்படுத்தி பட்டதாரிகள் முன்மாதிரியாக செயற்படுகின்றனர்.

“ஆதரவற்ற பெண்கள் தங்களது கனவுகளை அடைய உதவும் இத்திட்டம் வெற்றிகரமாக அமைய அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கிடைத்த உதவி முக்கிய பங்காற்றியிருப்பது மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது,” என்று கலாநிதி ராஜேந்திரன் தெரிவித்தார். “கண்டி அமெரிக்க தகவல் கூடத்துடனான சுமுகமான ஒத்துழைப்பானது பயன்மிக்க வளங்களுடன் கூடிய நட்பான மற்றும் இயலச்செய்யும் சூழலொன்றை எமக்கு வழங்குகிறது என்பதுடன், வெற்றிக்கான முக்கிய அங்கமொன்றாகவும் இது காணப்படுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு குழுவில் பங்கேற்ற 20 பேரில் 16 பேர் ஏற்கனவே தமக்கான சொந்த வர்த்தகங்களை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு குழுவின் திட்டமும் ஒரு வர்த்தக கண்காட்சியுடன் முடிவடைவதுடன், இது பங்கேற்பாளர்களின் விவசாய பொருட்கள், காகித உற்பத்திப் பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட விற்பனைப் பொருட்களை காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் திட்டத்தின் உள்ளகப் பயிற்சியாளர்களாக பணியாற்றி, திட்ட நிர்வாகம், நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் வெளிப்பாடு மற்றும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அமெரிக்க தகவல் கூடங்களானது பாடசாலை மற்றும் வர்த்தகத்தில் வெற்றிபெறத் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் பங்கேற்பாளர்களை ஆயத்தப்படுத்தும் பல்வேறு திட்டங்களை உள்ளூர் சமூகத்தினருக்கு வழங்குகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09