சீனாவிலிருந்து மேலும் 48 இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். நேற்று இரவும் மற்றும் இன்று  காலையும் கட்டுநாயக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக விமான நிலைய ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நேற்று இரவு 9 மணியளவில் சீனாவின் செங்டூ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சீ.ஏ.-425 விமானத்தினூடாக வந்த 33 மாணவர்களும், வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் சீனாவின் ஷெங்கயிலிருந்து புறப்பட்ட யூ.எல்-867 விமானத்தினூடாக 6 மாணவர்களும், யூ.எல்-867 விமானத்தினூடாக 9 மாணவர்களும் கட்டுநாயக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதன்போது குறித்த மாணவர்கள் விமான நிலையத்தின் சுகாதார பிரிவிலுள்ள மருத்துவர்களால் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பின்னர், சீனாவிலிருந்து கட்டுநாயாக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களிலுள்ள பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளதென விமான நிலைய கடமை நேர அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.