Deep vein thrombosis என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Daya

31 Jan, 2020 | 01:12 PM
image

காலையில் எழுந்தவுடன் கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். சிலர் இதனை அலட்சியப்படுத்திவிட்டு, தங்களது நாளாந்த காரியங்களில் ஈடுபடுவர்.  ஆனால் இத்தகைய அறிகுறி தெரிந்தால் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். 

ஏனெனில் கால் வீக்கம் என்பது உடல் உறுப்புகளின் செயலிழப்பிற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை வைத்தியர்கள் டீப் வெய்ன் த்ரோம்போசிஸ் என்கிறார்கள். அதாவது கால்களின் தசைகளுக்கு அடியிலுள்ள இரத்தக் குழாய்களில், அசுத்த ரத்தம் தேங்கி, உறைந்து போகும் நிலைதான் இந்த பாதிப்பு.

பொதுவாக இதயத்தின் ஒருபக்க அறையிலிருந்து பம்ப்பின் மூலம் உடல் பகுதி முழுவதும் செல்லும் இரத்தம், மற்றொரு பகுதியின் வழியாக உடலில் உள்ள கழிவுகள், நச்சுகள், அசுத்தங்களை எடுத்துக்கொண்டு வருகிறது. பிறகு அது நுரையீரல் வழியாக சென்று, கார்பன் டை ஆக்சைடாக மாறி, மூச்சுக்குழாய் வழியாக வெளியேறுகிறது. 

இந்த சுழற்சியில் அசுத்த இரத்தம், தசைகளின் கீழுள்ள ரத்த குழாய்களில் தங்கி விட்டால் அந்த இடம் வீங்கிவிடும். தசைகளின் அடியிலுள்ள ரத்த நாளங்களில் இது ஏற்படுகிறது. உடலின் ஏனைய பாகங்களில் வருவதைக் காட்டிலும் கால்களில் வருவது பொதுவானது. சிலருக்கு கை, கழுத்து என்று எந்த இடத்தில் வேண்டுமானாலும் இத்தகைய வீக்கம் ஏற்படக்கூடும்.

உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சி, உடலுழைப்பு  மற்றும் உடலியக்கம் இல்லாதவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. அதிக நாட்கள் ஓய்வில் இருப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரக்கூடும். இரத்த நாளங்களில் ஏற்படும் விபத்துகள், சில கவனக்குறைவான சத்திர சிகிச்சைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், பிறவிலேயே இரத்தம் உறையும் தன்மையில் சமச்சீரற்ற தன்மை இருப்பவர்கள் என பலருக்கும் இத்தகை பாதிப்பு ஏற்படக்கூடும்.

இரத்த நாளங்களில் உறைந்திருக்கும் அசுத்த இரத்தம், ஒரு துகள் போல மாறி, பல தருணங்களில் நுரையீரலிலுள்ள பிரதான இரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி, உடனடியாக உயிரிழப்பை உண்டாக்குகிறது. இதய செயலிழப்பை காட்டிலும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவது இத்தகைய பாதிப்புதான் என்பது அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் வைத்தியசாலைகளில் ஏற்படும் அசாதாரணமான உயிரிழப்புகளில், 30 சதவீதம் உயிரிழப்பு இத்தகைய பாதிப்பினால் ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இப்பிரச்சினை ஒரு முறை வந்தால் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இதற்கு சிகிச்சை பெறும் பொழுது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும். இதற்கு ஆறு மாதங்கள் தொடர் சிகிச்சை அவசியமாகிறது. அத்துடன் இதனை வராமல் தடுப்பதற்கான வாழ்வியல் நடைமுறை மாற்றத்தையும் நாம் பின்பற்றவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29