(செ.தேன்மொழி)

வலஸ்முல்ல பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலஸ்முல்ல  பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் திகதி துப்பாக்கி முனையால் அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த தங்கல்லை குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுனர்.  

சந்தேக நபர்கள் 12 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் , தங்கநகைகளையும் கொள்ளையிட்டுள்ளதுடன் , இவர்களால் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருத் தொகைப்பணம் , துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிம பகுதியைச் சேர்ந்த 32 - 36 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருக்கின்றனர்.