இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட முன்றிலில் மாணவ பேரவையின் ஏற்பாட்டில் நேற்று மாலை நடைபெற்றது.

மாணவ பேரவைத் தலைவர் டி.எம்.ஹிசாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகக் கலை, கலாச்சார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபுபக்கர், தொழில்நுட்பவியல் பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், முன்னாள் கலை, கலாச்சார பீட பீடாதிபதி பௌசுள் அமீர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸீல், தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றையும் தென்கிழக்கு பல்கலைக்கழக தேவைகள் பற்றியும் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், கலை, கலாச்சார பீட பிரிவு தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள், போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்கள் எனப் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.



