ஜனாதிபதி செயலகத்தின் முன்பு இன்றும் தொல்பொருள் துறை திணைக்களத்தின் பணியாளர்கள் ஒப்பந்த  அடிப்படையிலான  ஆரப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது சேவை காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த தொழில் நிரந்தரமாகும் வரை ஒப்பந்த காலத்தினை நீடிக்குமாறு கோரி நேற்றைய தினம் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் தமக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றும் தரும் வரையில் தொடர்ந்தும் ஆர்பபாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.