கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சையளிக்க சீனா, வுஹானில் பிரத்யோக வைத்தியசாலையை உருவாக்கி வருகிறது.

1000 படுக்கை வசதிகளை கொண்டதாக கூறப்படும் ஹூஷென்ஷன் வைத்தியசாலையில் கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த வைத்தியசாலையானது பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிக்குள் தயாராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு நெருக்கடியனா காலக் கட்டத்தில் சீனா கடந்த 2003 ஆம் ஆண்டில் பீஜிங்கில் ஒரு வாரத்தில் ஒரு பிரமாண்ட வைத்தியசாலையை நிர்மாணித்து அனைத்து நாடுகளின் பாராட்டை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Photo credit : CNN