இராஜகிரியவில் இயங்கிவந்த கமத்தொழில் அமைச்சின் விவசாய திணைக்களம் பத்தரமுல்லைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேவேளை அந்த பிரிவை மீள ஆரம்பிப்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் இன்று காலை 8.30 க்கு இடம்பெற்றது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த அரசாங்க காலத்தில் குறித்த விவசாய பிரிவு இராஜகிரிய பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் இயங்கியதுடன் அதனால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டமை  குறிப்பிடதக்கது.