கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு பொலிஸாருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 இலட்சம் ரூபா இழப்பீடும் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் ஜூலை 9, 2011 அன்று செய்த குற்றத்திற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் அவர்கள் மது போதையில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம் செலுத்தத் தவறினால் அவர்களின் சிறைத் தண்டனை தலா இரண்டரை ஆண்டுகள் நீட்டிக்கப்படும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய உத்தரவிட்டார்.