இரு தரப்பு மோதலை தடுக்க முற்பட்ட நபரொருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பரிதாபமான வகையில் உயிரிழந்துள்ளார்.

குறித்தச் சம்பவம் அனுராதபுரம்-மஹாபுலன்குலம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட நபரொருவர் குடி போதையில் மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் அவரது நண்பன் அங்கு வந்துள்ளதுடன் அவரை தடுக்க முயற்சித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர் தனது நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கத்திக் குத்திற்கு இலக்கானவர் மஹாபுலன்குலம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையாவார்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.