Published by R. Kalaichelvan on 2020-01-31 08:30:15
காட்டுயானை தாக்குதலுக்குள்ளாகி தம்பத்தேகம - குடாகல் விகாரை பகுதியில் வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு கடந்த 25 ஆம் திகதியில் இருந்து காட்டுயானைகளை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேய புத்தளம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தள்ளார்.
அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்பத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.