சீன நகருக்கு விமான சேவைகளை மேற்கொள்ளும் விமானங்களை விரிவான வகையில் பரிசோதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்துள்ளார். 

விமான பயணிகள் மற்றும் விமானத்தின் சுகாதாரத்தை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு அமைவாக ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை திவிர்க்குமாறும் சீனாவுக்கான விமான சேவைகளை மேற்கொள்ளும் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.