இயந்­தி­ர­ம­ய­மான தற்­கால உலகில் மனித சமு­தாயம் ஓர் திட்­ட­மி­டப்­பட்ட வரை­ய­றைக்குள் இறங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இம்­மனித குலத்தின் ஒவ்­வொரு அங்­கத்­த­வரும் தமது நாளாந்த வேலை­களை கூட திட்­ட­மிட்டு செய்ய வேண்­டிய கட்­டா­யத்­திற்கு ஆளா­கி­யுள்­ளனர்.

இதே போன்று திரு­ம­ண­பந்­தத்தில் இணைந்து ஒரு குடும்­பத்தை உரு­வாக்கும் ஒரு ஆணும் பெண்ணும் தமது குடும்­பத்தை திட்­ட­மி­டு­வதன் மூலம் ஒரு வெற்­றி­க­ர­மான குடும்ப வாழ்க்­கையை கொண்டு நடத்­தலாம்.

தமது வேலை வாய்ப்­புகள், கல்வி நட­வ­டிக்­கைகள், பதவி உயர்­வுகள் மற்றும் வரு­மா­னத்­திற்­கேற்ப தமது குழந்­தை­களின் எண்­ணிக்கை மற்றும் எந்­தெந்த காலப்­ப­கு­தி­களில் குழந்­தை­களைப் பெற்றுக் கொண்டால் சிறப்­பாக இருக்கும் என்­பதைப் பொறுத்து தமது குழந்­தை­களை திட்­ட­மி­டு­கின்­றனர். இவ்­வாறு தமது சூழ்­நி­லைக்­கேற்ப குழந்­தை­களைப் பெற்றுக் கொள்ள குடும்பக் கட்­டுப்­பாட்டு முறைகள் உத­வு­கின்­றன.

ஆனால், நடை­மு­றையில் எமது மக்கள் பலர் இவற்றின் மேல் அக்­க­றை­யற்ற தன்­மை­யி­னாலும் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறைகள் பற்­றிய சரி­யான விளக்­கங்கள் இல்­லா­மை­யாலும் அவற்றை சரி­யான முறையில் பயன்­ப­டுத்­தாமல் சிக்­கல்­களில் மாட்­டிக்­கொள்­கி­றார்கள்.

அதா­வது தம்­ப­திகள் சிலர் தமது உயர்­கல்­வி­களைத் தொடர்­வ­தற்­கா­கவோ அல்­லது வெளி­நாடு சென்று அங்கே தமது வாழ்க்­கையை ஆரம்­பிப்­ப­தற்­கா­கவோ தமக்­கு­ரிய சிறந்த வேலை வாய்ப்­பினைப் பெற்றுக் கொள்­வ­தற்கா­கவோ தமது ஒரு பிள்­ளைக்குப் பின்னர் அடுத்த குழந்­தையைத் தாம­தித்து உரிய கால இடை­வெ­ளியில் பெற்­றெ­டுப்­ப­தற்­கா­கவோ அல்­லது குழந்தைப் பாக்­கிய தேவை­களை முடித்துக் கொண்­ட­வர்கள் தமக்­கு­ரிய குழந்­தைகள் போதும் என நினைத்தால் மீண்டும் ஒரு கருத்­தங்­கலை தடை­செய்­வ­தற்­கா­கவோ இவ்­வா­றான குடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறைகள் உத­வு­கின்­றன. நடை­மு­றையில் பாவ­னை­யி­லுள்ள குடும்பக் கட்­டுப்­பாட்டு முறை­க­ளையும் அவற்றின் நன்மை தீமை­க­ளையும் பற்­றிய விப­ரங்­களை அறி­யத்­த­ரு­வது எமது கட­மை­யாகும்.

அவ­சர குடும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­தி­ரைகள்

அவ­சர குடும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­தி­ரை­க­ளா­வன எதிர்­பா­ராத தாம்­பத்­திய உறவின் பின் வேண்­டப்­ப­டாத கருத்­தங்­கலை தவிர்ப்­ப­தற்கு உறவு ஏற்­பட்டு 72 மணி நேரத்­திற்குள் பாவிக்­கப்­படும் மாத்­தி­ரை­க­ளாகும். இவை எல்லா மருந்­த­கங்­க­ளிலும் வாங்­கக் கூடி­ய­ன­வா­க­வுள்­ளன.

ஆனால், இவை நூறு வீதம் வெற்­றி­ய­ளிக்கும் எனக்­கூற முடி­யாது. சில வேளை­களில் தோல்­வி­யிலும் முடி­யலாம் அத்­துடன், இவற்றை மீண்டும் மீண்டும் பாவிக்கும் போது இவை வெற்­றி­ய­ளிக்கத் தவ­றி­வி­டு­கின்­றன. எனவே, குடும்­ப­மாக வாழும் தம்­ப­தி­யி­ன­ருக்கு நீண்­ட­கால நோக்கில் இது ஒரு சிறந்த குடும்பக் கட்­டுப்­பாட்டு முறை அல்ல. எனவே, இதனை அடிக்­கடி பாவிக்­கக்­கூ­டாது.

புதி­தாக மணம் முடித்த தம்­பதி சிறிது காலம் பாவிக்க உகந்த குடும்பக்கட்­டுப்­பாட்டு முறை

குடும்பக் கட்­டுப்­பாட்டு முறைகள் பல இருந்­தாலும் புதி­தாக மணம் முடித்த தம்­பதி­யினர் சிறிது காலத்தின் பின் குழந்தைப் பாக்­கி­யத்தை எதிர்­பார்ப்போர், அது­வரை பாவிப்­ப­தற்கு சிறந்த முறை மாதம் மாதம் எடுக்­கக்­கூ­டிய குடும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­திரைப் பக்­கற்­றுக்கள் ஆகும். இவற்றில் 28 மாத்­தி­ரைகள் உள்­ளன.

மாத­விடாய் தொடங்­கி­ய­தி­லி­ருந்து நாளாந்தம் ஒவ்­வொரு மாத்­தி­ரையை மறக்­காது உட்­கொள்ள வேண்டும்.

இவற்றை எடுத்து 28 வில்­லைகள் முடி­வ­டையும் போது அடுத்த மாத­விடாய் ஏற்­படும். இந்த மாத்­தி­ரை­களை எடுப்­பதன் மூலம் நீண்­ட­கால நோக்கில் உங்­க­ளது குழந்தைப் பாக்­கியம் வேண்­டிய நேரத்தில் தாம­த­ம­டையப் போவ­தில்லை

குடும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­தி­ரையால் ஏற்­படக் கூடிய நன்மை

இக்­கு­டும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­தி­ரைகள் மாத­விடாய் நேரத்தில் தோன்றக் கூடிய வயிற்­று­வலி மற்றும் அதி­கப்­ப­டி­யான குரு­திப்­போக்கு என்­ப­வற்றை கட்­டப்­ப­டுத்­து­கின்­றன. அத்­துடன், மாத­விடாய் தோன்­று­வ­தற்கு முன் ஏற்­படும் அழுத்­தங்கள் போன்­ற­வற்­றையும் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது.

மற்றும் சூல­கக்­கட்­டிகள், மார்­ப­கக்­கட்­டிகள், கர்ப்­பப்பை புற்­றுநோய், சூலகப் புற்­றுநோய் போன்­ற­வற்றைக் குறைக்­கின்­றது. மாத­வி­டா­யையும் மாதம் மாதம் ஏற்­ப­டுத்­து­கின்­றது.

குடும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­தி­ரையை பாவிக்க முடி­யாத பெண்கள்

* இரு­தய நோய் மற்றும் மார­டைப்பு நோயுள்­ள­வர்கள்.

* உயர் குரு­தி­ய­முக்கம் மற்றும் கொலஸ்ட்ரோல் நோயு­டை­ய­வர்கள்.

* ஒற்­றைத்­த­லை­வலி உடை­ய­வர்கள்

* ஈரல் நோயு­டை­ய­வர்கள்

* நீரி­ழிவு நோயு­டை­ய­வர்கள்

* மார்­பகப் புற்று நோயு­டை­யவர்கள்

* அதிக உடல் பரு­ம­ன் உ­டை­ய­வர்கள்

ஆகியோர் இம்­மாத்­தி­ரையைப் பாவிப் ப­தனை தவிர்க்க வேண்டும். பிர­ச­வத்தை முடித்த ஒருவர் பாவிக்­கக் கூ­டிய குடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறை

பிர­ச­வத்தின் பின் பெண்­ணொ­ருவர் ஒரு­மாத காலத்தில் தனது குடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறையை ஆரம்­பிப்­பது அவ­சியம். இதில் பாலூட்டும் தாய் என்­பதால் குடும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­தி­ரை­களை தவிர்ப்­பது சிறந்­தது. ஏனெனில், இவை பாலின் அளவைக் குறைக்கும். எனவே, மூன்­று­மாதக் காலத்­திற்கு ஒரு­முறை போடப்­படும் குடும்பக் கட்­டுப்­பாட்டு ஊசி முறை இவர்­க­ளுக்கு சிறந்­தது. பாவ­னைக்கு இல­கு­வா­னது.

ஆனால், இது சிலரின் உடல் நிறையை அதி­க­ரிக்­கலாம் .அத்­துடன் மாத­வி­டாயின் அள­வையும் குறைக்­கலாம். இதனால் பெண்கள் இவ்­வூசி முறையைப் பாவிப்­ப­தற்கு தயக்கம் காட்­டு­கின்­றனர்.

இவர்­க­ளுக்கு நீண்­ட­கால நோக்கில் குடும்பக் கட்­டப்­பாட்டு லூப் முறைகள் அதா­வது கர்ப்­பப்­பை­யினுள் போடப்­படும் சிறிய குச்­சிகள் மற்றும் மேல் கையினுள் போடப்­படும் சிறிய குச்­சிகள் என்­பன பிர­பல்­ய­மா­னவை.

பெண்­களின் கர்ப்­பப்­பை­யினுள் போடப்­படும் சிறிய குச்­சிகள் (லூப்) மூலம் கர்ப்­பந்­த­ரித்­தலை தடைப்­ப­டுத்தி பின் குழந்­தை­யொன்று தேவை எனும் போது அந்த லூப்பை கழற்றி விடலாம். இம்­முறை நீண்­ட­கா­ல­மாக நடை­மு­றை­யி­லி­ருந்து வரு­வது பலரால் அறி­யப்­பட்ட விட­ய­மாக இருந்து வரு­கி­றது.

பெண்­களின் கையில் போடப்­படும் லூப் முறை

மேல் கையின் உட்­பு­றத்தில் தோலின் கீழ் போட்டு விடப்­படும் சிறிய தீக்­குச்சி போன்ற லூப்கள் தற்­போது சிறந்த முறை­யாக பிர­பல்­ய­ம­டைந்து வரு­கின்­றன. இவற்றை நாம் சிறிய விறைப்பு ஊசியின் உத­வி­யுடன் இல­கு­வாக உட்­செ­லுத்தி விட­மு­டியும். கையில் எவ்­வித தழும்­பு­களோ, காயங்­களோ தெரி­யாது. அத்­துடன், இதனை ஐந்து வரு­டங்­க­ளுக்கு பாவிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இதன் பக்­க­வி­ளை­வுகள் என குறிப்­பிட்டு சொல்­வ­தற்கு எது­வு­மில்லை. ஓர­ளவு மாத­வி­டாயின் அளவு குறை­வாக இருக்கும். அத்­துடன், தேவை­யான நேரத்தில் கழற்றி விடவும், பின் தாம­த­மின்றி மீண்டும் கருத்­த­ரிக்­கக் கூடி­ய­தா­க­வும் உள்­ளது.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை

இது ஒரு நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை முறை. தமக்குத் தேவை­யான குழந்­தை­களைப் பெற்­று­விட்டோம் இனி குழந்தை பெறும் நோக்கம் இல்லை என்­ப­வர்­களுக்கு இவ்­வகை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. அது பெண்களின் வயிற்றை சிறிதளவு வெட்டி செய்யப்படும். ஆனால், தற்பொழுது நவீன சத்திர சிகிச்சை முறையான லப்பிரஸ்கோப்பி மூலம் இது இலகுவாக்கப்பட்டுள்ளது.

பெண்ணை மயக்கி வயிற்றில் சிறு துளை மூலம் இச்­சத்­தி­ர­சி­கிச்சை மேற்கொள்ளப்­ப­டு­கின்­றது. இதன் போது 2-3 மணித்­தி­யா­லங்­களின் பின் பெண் வீடு­செல்ல கூடி­ய­தா­க­வுள்­ளது. சில­வே­ளை­களில் மீண்டும் சில கார­ணங்­க­ளுக்­காக குழந்தை பெறத் தீர்­மா­னிக்­கும்­போது இச்­சத்­திர சிகிச்­சையை மறு­சீ­ர­மைக்க முடியும். பழைய நிலைக்குக் கொண்­டு­வ­ர­மு­டியும். ஆனால், வெற்றி 50 வீதம் மட்­டுமே.

எனவே, உங்­க­ளுக்குத் தேவை­யான பொருத்­த­மான குடும்பக் கட்­டுப்­பாட்டு முறை­களை வைத்­திய ஆலோ­ச­னைப்­படி தேர்ந்­தெ­டுத்து வள­மான குடும்பத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.