பேலியகொட மற்றும் ஹொரண பகுதிகளில் புதன்கிழமை திடீர் தீ விபத்துகள் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேலியகொட
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலபிடிய - களனி பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு அருகில் குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்ட போதே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பிரதேச மக்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் வீடு முற்றாக பாதிப்படைந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹொரண
ஹொரண பொலிஸ் பிரிவின் வகவத்த பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
ஹொரண பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாரும் ஹொரண நகர சபையின் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரதேச மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீ ஏற்பட்ட காரணம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM