கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பகுதியை கைப்பற்றிய சிரியா!

Published By: Daya

30 Jan, 2020 | 04:32 PM
image

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பகுதியை, ரஷ்யப் படைகள் ஆதரவுடன் சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

அலெப்போ மற்றும் டமாஸ்கஸை இணைக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியான மாரெட் அல் நுமன் பகுதியையே சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிரிய அரசுப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக சிரியாவில் பல கிராமங்களி லிருந்து கிளர்ச்சியாளர்களின் படைகள் அகற்றப்பட்டுள்ளன. சிரிய மண்ணில் தீவிரவாதம் இல்லாதவரை இந்தத் தேடுதல் வேட்டை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உட்நாட்டுப் போர் காரணமாக சுமார் 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08