வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண், பெண் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள்,  நாவின்ன - தேவேந்திர வீதியை சேர்ந்த கணவன், மனைவியே என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் கடந்த இரண்டு, மூன்று தினங்களிற்கு முன்னரே இறந்திருக்கக்கூடும் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 மேலும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.