(செ.தேன்மொழி)

கொரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டை காப்பாற்ற எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைப்பேசியில் கலந்துரையாடியதன் பின்னர் இந்தியாவிலிருந்து இலவசமாக சுவாசக் கவசங்களை (மாஸ்க்) இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

சீனா - வுஹான் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மாணவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி அந்த மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சீனா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதேவேளை நாட்டுக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் அரசாங்கம் செய்துக் கொடுக்க வேண்டும்.

தம்பதிவ யாத்திரை மேற்கொள்ளும் பக்கதர்கள் 35 ஆயிரம் பேர் வரை பயண அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலினால் இவ்வாறு அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்ட அனைவரும் செல்லாமல் இருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. இந்த பயணப்பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக ஒருவருக்கு 56,000 ரூபாய் பணம் செலவிடவேண்டியுள்ளது. 

இந்நிலையில் இவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி , யாத்திரையை மேற்கொள்ள முடியாமல் போகும் பக்தர்களுக்கு இன்னும் இரண்டு அல்து மூன்று மாதங்களுக்கு பின்னர் தமது யாத்திரையை மேற்கொள்வதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இந்த விடயம் தொடர்பில் விமான நிலையங்களுடன் கலந்துரையாn இந்த பக்கதர்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.