நியூசிலாந்து தனது நாட்டு பிரஜைகளை சீனாவில் உள்ள வுஹானில் இருந்து வெளியேற்ற 300 இருக்கைகள் கொண்ட விமானமொன்றை அனுப்பவுள்ளது.

அத்தோடு வுஹானில் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் 53 பேர் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில் தங்கியிருக்கும் நியூசிலாந்து பிரஜைகளின் சரியான எண்ணிக்கை கிடைக்கபெறாத நிலையில் அங்கு மேலும் பல தனது நாட்டு பிரஜைகள் இருக்கக் கூடுமென சந்தேகிப்பதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

அத்தோடு நீயூசிலாந்தில் இருந்து அனுப்படும் விமானத்தில் வுஹானில் உள்ள அவுஸ்திரேலியருக்கும் தனது விமானத்தில் இடம்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சீனாவுக்கு விமானத்தை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை துரிதப்டுத்தியுள்ளதாகவும் வுஹானில் இருந்து புறப்படும் தன் நாட்டு பிரஜைகளை முழு பரிசோதனை செய்வதோடு , அவர்களை தனிமைப்படுத்தி சுகாதார பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை அவர்களின் விமான சீட்டுக்கான கட்டணம் உள்ளிட்ட சில செலவுகளை அரசு பொறுப்பேற்குமென அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியூசாலந்தில் கொரோனா வைரஸ் தொடர்பான எவ்வித பதிவுகளும் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையில், ஆக்லாந்து வைத்தியசாலையில் மாணவர் ஒருவர் குறித்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என அவர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.