பிரபல நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

By J.G.Stephan

30 Jan, 2020 | 02:37 PM
image

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா உடல் நலகுறைவால் உயிரிழந்தார்.  மரணிக்கையில் இவருக்கு வயது 75. வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக அறிமுகம் ஆனவரே டி.எஸ். ராகவேந்திரா.

அதன்பின் சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் இருந்து உள்ளமை குறிப்பிடதக்கது. 

சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.எஸ்.ராகவேந்திரா இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right