கதிர்காமத்தை நோக்கிய 400 கிலோமீற்றர் பாதயாத்தரை நேற்று மாலை   மட்டக்களப்பை வந்தடைந்தது. 

இப்பாதயாத்திரை கடந்த  மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து  ஆரம்பமாகி   திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கூடாக  எதிர்வரும்  மாதம் 04 ஆம் திகதி கதிர்காமம் முருகன் ஆலய திருத்தலத்தை அடையவுள்ளது. 

இடை நடுவில் குறித்த மாவட்டங்களின் பிரதான ஆலயங்களில் தங்கி மேற்படி பக்தர்கள் கதிர்காமத்தை அடையவுள்ளனர். இப்பாதையாத்திரை குழுவில் ஆண்கள் பெண்கள் அடங்கலாக சுமார் 120 பேர் உள்ளடங்குகின்றனர்.

-ஜவ்பர்கான்