சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால் அந் நாட்டில் நடைபெறவிருந்த உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் நாஞ்சிங்கில் ஆரம்பமாகவிருந்தது. எனினும் கொரானவின் பரவல் அதிகரித்துள்ளமையினால், இதில் கலந்து கொள்ளும் வீரர்களின் நலன் கருதியே குறித்த தொடரை ஒத்திவைப்பதாக சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அத்துடன் உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நடத்துவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவளை கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து உள் நாட்டு போட்டிகளையும் ஒத்தி வைத்துள்ளதாக இன்றைய தினம் அறிவித்துள்ள சீன கால்பந்து சங்கம், விளையாட்டுகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான உத்தியோகபூர்வ திகதி எதையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.