பிர­பா­கரன் என்னை ஒரு­போதும் துரோ­கி­யென்று கூறியது கிடையாது - கருணா

30 Jan, 2020 | 12:10 PM
image

 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசியம் பேசிக்­கொண்டு தொடர்ந்தும் தமிழ் மக்­களை ஏமாற்­றிக்­கொண்டே வரு­கின்­றது. இவர்­களின் இந்த ஏமாற்று வித்­தையை தமிழ் மக்கள் இன்று உணரத் தொடங்­கி­விட்­டனர்.  எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் தமிழ் மக்கள் தரப்பில் உள்ள அனைத்து தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமி­ழர்­களின் இருப்பை பலப்­ப­டுத்­து­வதே எமது இலக்­காகும்  என தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பிரதி அமைச்­ச­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன்  குறிப்­பிட்டார்.

 துறை­நீ­லா­வ­ணையில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போது அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள மாவை சேனா­தி­ரா­ஜாவைத் தவிர   ஏனை­ய­வர்கள் தமிழ்த் தேசியம் பேசு­வ­தற்கு அரு­க­தை­யற்­ற­வர்கள். தமிழ்த் தேசியம் பேசு­வ­தற்கு மாவை சேனா­தி­ராஜாவுக்கு  மட்­டுமே அருகதையுள்ளது. இவர் தமிழ்த் தேசி­யத்­துக்­காக அன்றும் இன்றும் உணர்வு பூர்­வ­மாக போராடி வரு­பவர் .எங்­க­ளைப்­போன்­ற­வர்­களை ஆயுதப் போராட்­டத்­துக்கு அனுப்பி வைத்­த­வர்­களுள் இவரும் ஒருவர். இதற்­காக வேண்டி நான் என்றும் அவரை மதிக்­கிறேன்.

அம்­பாறை மாவட்­டத்தில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய மாவட்ட தமிழ் மக்­க­ளை­வி­டவும் பல சவால்­க­ளுக்கும் இன்­னல்­க­ளுக்கும் இன்னும் பல பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றனர். கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்­கான அதி­கா­ரங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வசம் இருந்தும் அதனை அவர்கள் செய்­ய­வில்லை. இது விட­யத்தில் தம்மை ரணில் ஏமாற்­றி­விட்­ட­தாக கூட்­ட­மைப்பு தற்போது நாட­க­மா­டு­கி­றது.

எனவே எதிர்­வரும் தேர்­தலில் தமிழ் மக்கள் சிந்­தித்து வாக்­ளிக்க வேண்டும். என்னை இன்று பலர் துரோகி என்கின்றார் கள். ஆனால் தேசியத் தலைவர் பிரபாகரன் என்னை ஒருபோதும் துரோகி என்று குறிப்பிடவில்லை. ஆகவே யார் துரோகி என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:51:24
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45