(க.கிஷாந்தன்)
நுவரெலியா கந்தபளையில் வசிக்கும் விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்பவர் கடதாசித் தாள்களைக் கொண்டு பல விநோதமான கைப்பணிகளை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர் விவசாயத்து தனது தொழிலாக கொண்டுள்ள போதும் தனது மனைவி மற்றும் குடும்பத்தாரரின் உதவியுடன் இவ்வாறான அற்புதமான கைப்பணி வேலைப்பாடுகளை செய்து வருகின்றார்.
இவர் செய்துள்ள கைப்பணி வேலைகளை இப்பகுதி மக்கள் பார்வையிடுகின்றனர். அத்துடன் இவற்றை விலை கொடுத்தும் கொள்வனவு செய்கின்றனர்.
இந்நிலையில் தனது கைப்பணி வேலைப்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த சந்திக அருண சாந்த,
நான் இவ்வாறான கடதாசி தாள்களை கொண்டு பல உருவங்கள் வடிவமைத்து வருகின்றேன். தன்னிச்சையாகவே குடும்பத்தாரின் உதவியுடன் செய்து வரும் இவ்வேலைகள் பணத்திற்காக அல்ல. நவீன உலகில் நாமும் ஆக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு இவ்வாறான வேலைப்பாடுகளை செய்து வருகின்றேன்.
பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் இவ்வாறான செய்பாடுகளை செய்து சாதனைகள் படைக்க வேண்டும். எனது சொந்த செலவிலேயே இதுவரை காலமும் கைப்பணி வேலைகளை செய்து வந்தேன்.
இப்போது செய்திருக்கும் மோட்டர் சைக்கிளின் உருவுக்காக சுமார் 30,000 ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு 5 மாதங்களில் இதனை உருவாக்கினேன்.
நான் செய்து வரும் இந்த கைப்பணிகளுக்கு பல்வேறுப்பட்ட வரவேற்பும் பாராட்டுகளும் சான்றிதழ்களும் கிடைக்கபெற்றுயிருக்கின்றன டின அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM