கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் இடமாக கருதப்படும் வுஹான் நகரத்தில் சிக்கியுள்ள ஏனைய நாட்டுப் பிரஜைகளை அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கு சீனாவின் விமானப் போக்குவரத்து ஆணையகம் அனுமதி வழங்கியுள்ளது.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஜனவரி 23 முதல் வுஹானுக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

வுஹான் பிரதேசத்தில் ஆரோக்கியமாக இருக்கும் மக்கள் விமானத்தில் பயணித்திற்காகக ஏறும்போது அதனை தடுக்க வேண்டாம் எனவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.