வுஹானிலிருந்து வரும் இலங்கை மாணவர்களை வைத்திய பரிசோதனைக்குட்படுத்த தியத்தலாவ இராணுவ முகாமில் 33 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க தெரிவித்தார்.

வுஹானிலிருந்து நாடு திரும்பும் மாணவர்களை விமான நிலையத்திலிந்து உச்ச பாதுகாப்புடன் தியத்தலாவைக்கு அழைத்து வந்து, இந்த தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர்  கூறினார்.

தியலத்தலாவை இராணுவ முகாமில் மருத்துவ ஊழியர்கள் உட்பட இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு ஒரு மாதத்திற்கும் மேலாக 24 மணி நேர கடமையில் இருக்கும்.

பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் இணைக்கப்பட்ட குளியலறைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும். எந்தவொரு மாணவருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அவர் உடனடியாக தொற்று நோய்கள் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்.