வவு­னி­யாவைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் ந.கபி­ல­நாத்தின் ''22 முகங்கள்'' நூல் வெளி­யீடு எதிர்­வரும் முதலாம் திகதி சனிக்­கி­ழமை மாலை 3 மணிக்கு இடம்­பெ­ற­வுள்ளது. 

ஓய்­வு­ பெற்ற வவு­னியா கல்­வி­யியல் கல்­லூ­ரியின் பீடா­தி­பதி க.சுவர்­ன­ராஜா தலை­மையில் வவு­னியா குடி­யி­ருப்புப் பிர­தேச கலா­சார மண்­ட­பத்தில் இடம்­பெ­ற­வுள்ள நிகழ்வில்,பிர­தம விருந்­தி­ன­ராக மூத்த ஊட­க­வி­ய­லா­ளரும் ஆய்­வா­ள­ரு­மான தமிழ்­நிதி அருணா செல்­லத்­துரை கலந்­து­கொள்­ள­வுள்­ள­துடன் சிறப்பு விருந்­தி­ன­ராக வீர­கே­சரி நாளி­தழின் ஆசி­ரியர் எஸ்.ஸ்ரீக­ஜனும்  கெள­ரவ விருந்­தி­னர்­க­ளாக பிர­பல வர்த்­தகர் ச.இரா­ச­லிங்கம் மற்றும் மாவீரன் பண்­டா­ர­வன்­னியன் மறு­ம­லர்ச்சி மன்­றத்தின் செய­லாளர் செ.சபா­நாதன் ஆகியோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

இதே­வேளை, தமிழ்த் தாய் வாழ்த்­தினை செல்வி பாலேந்­திரன் பானு­ஜாவும் வர­வேற்­பு­ரை­யை கோ.சிவ­நே­ச­லிங்­கமும் நூல் அறி­மு­க­வு­ரை­யை வவு­னியா தேசிய  கல்­வி­யியல் கல்­லூரி விரி­வு­ரை­யாளர்  பத்­மா­வதி ஜெயச்­சந்­தி­ரனும் நூல் ஆய்­வு­ரை­யை வவு­னியா வடக்கு ஆசி­ரியர் வள நிலை­யத்தின் முகா­மை­யாளர் சு.ஜெயச்­சந்­தி­ரனும் நிகழ்த்­த­வுள்­ளனர். 

கெளரவ பிரதியை நூலாசிரியரின்  தந்தை செ.நவரத்தினம் பெறவுள்ளதுடன் நிகழ்ச்சியை ஊடகவியலாளர் கோ.ரூபகாந் தொகுத்து வழங்கவுள்ளார்.