கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7,711 பேர் பாதிப்படைந்துள்ளதாக சீனா இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003 ஆம் காலப் பகுதியில் பரவத் தொடங்கிய சுவாச தொற்று நோயான சார்ஸ் வைரஸின் தாக்கத்தை விடவும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவுள்ளது.

சார்ஸ் வைரஸ் உலகம் முழுவதும் 17 நாடுகளில் பரவி மொத்தமாக 774 பேரை உயிரிழக்க செய்தது. இதனால் சீனாவில் 5,327 பேரும், 349 பேரும் உயிரிழந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியது.

எனினும் கொரானாவினால் உலகளாவிய ரீதியில் 7814 பேர் பாதிப்படைந்துள்ளதாக சீன அதிகாரிகளும், உலக சுகாதார அமைப்பும் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. 

கொரோனாவினால் நேற்றைய தினம் உலகளாவிய ரீதியில் 6000 ஆக இருந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளி விரபங்களின் அடிப்படையில் கொரானாவினால் மொத்தமாக 170 பேர் தற்போது வரை இறந்துள்ளனர். 

இருந்தபோதும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் சோதனைக் கருவிகளின் பற்றாக்குறைவால் சுகாதார அதிகாரிகளை நோயைத் துல்லியமாகக் கண்டறிந்து கண்காணிக்கும் திறனைத் தடுத்துள்ளது.

கொரானாவினால் பாதிப்படைந்ந நாடுகளின் விபரம் - (மொத்தம் : நாடுகள் - 21, பாதிப்படைந்தோர் -7,814, உயிரிழப்பு - 170)

1. சீனா : 7,711 பாதிப்பு, 170 பேர் உயிரிழப்பு

2. தாய்லாந்து : 14 பேர் பாதிப்பு

3. ஹொங்கொங் : 11 பேர் பாதிப்பு

4. சிங்கப்பூர் : 10 பேர் பாதிப்பு

5. தாய்வான் : 08 பேர் பாதிப்பு

6. ஜப்பான் : 08 பேர் பாதிப்பு

7. மாக்கோ : 07 பேர் பாதிப்பு

8. மலேசியா : 07 பேர் பாதிப்பு

9. அவுஸ்திரேலியா : 07 பேர் பாதிப்பு

10. அமெரிக்கா : 05 பேர் பாதிப்பு

11. தென்கொரியா : 04 பேர் பாதிப்பு

12. பிரான்ஸ் : 04 பேர் பாதிப்பு

13. ஜேர்மன் : 04 பேர் பாதிப்பு

14. டுபாய் : 04 பேர் பாதிப்பு

15. கனடா : 03 பேர் பாதிப்பு

16. வியட்நாம் : 02 பேர் பேர் பாதிப்பு

17. கம்போடியா : ஒருவர் பாதிப்பு

18. நேபாளம் : ஒருவர் பாதிப்பு

19. பின்லாந்து : ஒருவர் பாதிப்பு

20. சிம்பாப்வே : ஒருவர் பாதிப்பு

21. இலங்கை : ஒருவர் பாதிப்பு

கொரோனா வைரஸின் பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதனால் உலக நாடுகள் விழப்புடன் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார அவசரகால திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் தற்போது தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பால் உலக நாடுளில் அவசர நிமைகளை பிரகடணப்படுத்த வேண்டுமா என்பது தொடர்பில் ஆராய இன்றைய தினம் உலக சுகாதார ஸ்தாபனம் கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.