இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தைக் குறைக்க  தீர்மானித்துள்ளதாக இன்று தனது நாணயக் கொள்கை மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தில் நேற்று (29.01.2020) நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி,நிலையான வைப்பு (SDFR)  6.5 சதவீதமும் , நிலையான வைப்பு கடன் (SLFR) 7.5 சதவீதமும் என குறைக்க முடிவு செய்துள்ளது.

சட்டரீதியான இருப்பு விகிதம் (SRR) மாறாமல் 5.00 சதவீதமாக உள்ளது.

இலங்கையின் மத்திய வங்கியின் நாணய வாரியம் பணவியல் கொள்கைகளை தளர்த்தவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தை நடுத்தர ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட கொள்கை வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய வங்கி நேற்று தனது நாணயக் கொள்கை மதிப்பாய்வில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.