வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில்  மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழிலிருந்து வவுனியா நோக்கிசென்ற பஸ் ஒன்று ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விளக்குவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த  19 வயதான பாணுஜன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்றுவருகிறார்.

குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.