(எம்.எப்.எம்.பஸீர்)

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் ஒலியை பதிவு செய்வதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி அரச பகுப்பாய்வு நிலையத்தில் அவரை முன்னிலையாக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.

நீதிபதிகள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இன்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை அல்லது அழுத்தம் கொடுக்க முயற்சித்தமை  தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு இன்றைய தினம் நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணையாளர்களான கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா, பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்கவுடன் அரசின் சிரேஷ்ட சட்டவடஹி ஜனக பண்டார  ஆகியோர் ஆஜராகினர்.  சந்தேக நபரான ரஞ்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிவான் சந்தேக நபரான ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் ஒலியை பதிவு செய்வதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி அரச பகுப்பாய்வு நிலையத்தில் அவரை முன்னிலையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.